புதிய கல்விக் கொள்கையின் படி, நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு எனப்படும் CUCET தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. இந்த நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பட்டப் படிப்புகளில் சேருவதற்கான CUCET தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 13) இணையதளத்தில் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் CUCET தேர்வுகள் நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகளை https://pgcuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.