எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்படுவதாக அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில் தலைமை தேர்தல் ஆணையர், தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழக உளவுத்துறையில் செயல்படும் அதிகாரிகள் பெகாசஸ் உள்ளிட்ட மென்பொருள்களை பயன்படுத்தி அதிமுகவினரின் உரையாடலை ஒட்டுக் கேட்பதாக கூறப்பட்டுள்ளது. முக்கியமாக உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேலன் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.