ஒகேனக்கலில் நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு

62பார்த்தது
ஒகேனக்கலில் நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து இன்று 2வதுநாளாக 4ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த சில வாரங்களாக நீர்வரத்து ஆயிரம் கனஅடிக்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று 1,281 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 1,465 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று 39.70 அடியாக இருந்து நீர்மட்டம், இன்று 39.76 அடியாக சற்று உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 11.96 டிஎம்சியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி