கெஜ்ரிவாலின் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

73பார்த்தது
கெஜ்ரிவாலின் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரிக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபங்கர் தத்தா ஆகியோர் இந்த வழக்கை காலை 10.30 மணிக்கு விசாரிக்கின்றனர். இந்த வழக்கில் கடந்த மார்ச் 21ஆம் தேதி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தற்போது திகார் சிறையில் உள்ள அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது.

தொடர்புடைய செய்தி