நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள புத்தேரி கிராமத்தில் தனியார் கல்குவாரியில் கற்கள் சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணிகளில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் கல்குவாரியில் இன்று மதியம் கற்கள் உடைக்க வெடி வைத்த போது பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கற்குவியல் முழுவதுமாக அகற்றப்பட்ட பிறகு தான் விபத்தில் சிக்கியவர்கள் குறித்த விபரங்கள் தெரியவரும் என தகவல் வெளியாகியுள்ளது.