சாதனை படைத்த 'ரவுடி பேபி'

839பார்த்தது
சாதனை படைத்த 'ரவுடி பேபி'
தனுஷ் நடிப்பில் 'மாரி 2' படத்தின் 'ரவுடி பேபி' பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த பாடல், உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 2018 ஆம் ஆண்டு யூடியூபில் வெளியான ரவுடி பேபி பாடல், தமிழ் சினிமாவில் அதிக பார்வையாளர்களை கடந்த பாடல் என்ற பெருமையைப் பெற்றது. இந்த நிலையில், தற்போது 150 கோடி (1.5 பில்லியன்) பார்வையாளர்களை கடந்து இந்த பாடல் அசத்தியுள்ளது. இதனால் #rowdybaby ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி