குரு பகவான் இன்று (செப்.13) மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார். குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இந்த குருபெயர்ச்சியினால், மிதுனம், சிம்மம், துலாம் ஆகிய ராசிகள் நன்மை பெறும். அதேபோல், மேஷம், ரிஷபம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு நன்மை மற்றும் தீமை இரண்டும் கலந்து பலன் பெறும். கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யவேண்டும்.