ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு ரஷித் கான் கேள்வி!

54பார்த்தது
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு ரஷித் கான் கேள்வி!
“விளையாட்டு ஒரு நாட்டை மட்டுமன்றி அனைவரையும் ஒன்றிணைக்க கூடியது. நான் எல்லா அணிக்கு எதிராகவும் விளையாட விரும்புகிறேன். ஆஸ்திரேலியாவால் உலக கோப்பையில் எங்களுடன் விளையாட முடியும்போது, இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் ஏன் விளையாட முடியாது?” என ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் கேள்வியெழுப்பி உள்ளார். தாலிபன்களின் ஆட்சியை காரணம் காட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு போட்டிகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தொடர்ச்சியாக ஒத்திவைத்து வந்த நிலையில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் இக்கேள்வியை எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி