திருவடனை - Tiruvadanai

ராமநாதபுரம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் மதிக்காத அதிகாரிகள்....

பொன் பாலா பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் திருவாடானை, திருவாடானை தாலுகா தலைமை இடத்தில் அவலம். இன்னமும் அடிப்படை வசதி இல்லாத அரசு துவக்க பள்ளிக்கூட கழிப்பிடத்தில் நோய்த் தொற்று அபாயம். மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் மதிக்காத அதிகாரிகள். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இந்த துவக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 62 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தாலுகா அலுவலகம், துணை கண்காணிப்பாளர்,   வட்டார கல்வி  அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு   மிக அருகில் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 62 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.  தற்போது கல்வி பயின்று வரும் கட்டிடமும் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.   இந்த வகுப்பறை கட்டிடம் சேதமடைந்து இருந்த அதனை 2023 - 2024ம் ஆண்டு நிதியில் மராமத்து செய்து உள்ளனர். தற்போது பெய்த மழையில் ஊறல் எடுத்து ஆபத்தான நிலையில் உள்ளது. சுத்தமான குடி தண்ணீர் இல்லை   இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பள்ளிக்கூட மாணவமாணவிகள் களுக்கு குடிதண்ணீர் வசதி இல்லை, மாணவ மாணவிகள் கழிப்பிடம் செல்ல உரிய கழிப்பிடம் வசதி இல்லை, ஆனால் ஐந்துக்கும் மேற்பட்ட கழிப்பிட கட்டிடங்கள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.