திருவாடானை ஒருங்கினைந்த நீதிமன்றத்தில் தேசிய லோக் அதாலத் நீதிமன்றம் நடந்தது.
திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று தேசிய லோக்கல் நீதிமன்றம் நடைபெற்றது
இதற்கு நீதிபதிகள் மனிஷ் குமார், ஆண்டனி ரிசார்ட் சேவ் தலைமையில் நடந்தது. நிகழ்வில் குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள் மற்றும் ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டப்பிரிவின கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சில வழக்குகளில், நீதிபதிகளின் சமரச முயற்சியால் இரு தரப்பினரும் சமாதானமாக செல்ல சம்மதித்தனர். குறிப்பாக, குடும்ப பிரச்சனைகள் தொடர்பான வழக்குகளில் சமரசம் ஏற்படுத்தப்பட்டு, பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கப்பட்டன. இது மக்களிடையே நீதித்துறை மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. இந்த தேசிய லோக்கல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள், வழக்காடிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்