கண்ணமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு கிராம மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு தேவையான பொருட்களை கல்வி சீராக வழங்கினர். தலைமை ஆசிரியை அனுசுயா வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் பால்டேவிட் ரொசாரியோ, ஜான் சார்லஸ், பிரான்சிஸ் ஜஸ்டின், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரான்சிஸ் முன்னிலை வகித்தனர். இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ராமச்சந்திரன், ஜலாலுதீன், பாலகுமார், கரோலின் மேரி ஆகியோர் கலந்துகொண்டனர்.