முத்துமாரியம்மன் கோவில் திருவிழா: பால்குட வீதி உலா.!

60பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை கிழக்குத் தெரு முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த செவ்வாய் கிழமை 20ம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து நாள் தோறும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இன்று, கையில் காப்புக்கட்டிய  பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் விதமாக விரதம் இருந்து அம்மனுக்கு பால்குடம் எடுத்து திருவாடானை நான்கு வீதியில் வழியாக சுற்றி வந்து கோவிலில் அடைந்தனர்.

தொடர்ந்து, கோவிலில் பக்தர்கள் சுமந்து வந்த பாலைக்கொண்டு மூலவரான அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.

பின் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து இரவு கலை நிகழ்ச்சியும் அண்ணதானமும் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி