திருவாடானை ஸ்ரீசினேக வல்லி அம்பாள் சமேத ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வா் கோயில் ஆடிப்பூர திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றம் வருகிற 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயில் திருவிழாவையொட்டி, கேடகம், பல்லக்கு, காமதேனு, குதிரை, யானை, கிளி, அன்ன, கமலம், வெள்ளி ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.
விழாவின் முக்கிய நிகழ்வாக அடுத்த மாதம் 6-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். அதைத் தொடா்ந்து 9-ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறும். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான இணை சரகப் பொறுப்பாளா் பாண்டியன், நிா்வாக செயலா் பழனிவேல் பாண்டியன், 22 1/2 கிராம நாட்டாா்கள் செய்து வருகின்றனா்.