இராமேஸ்வரத்தை சேர்ந்த ராபர்ட் என்ற மீனவர் இலங்கை கடற்பரையால் சிறைபிடிக்கப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை மிட்க அவரது குடும்பத்தினர் பல்வேறு வகையில் முயற்சி செய்தனர்.
இந்நிலையில் இலங்கை சிறைத்துறை நாளை முன்னிட்டு 350 சிறைக்கைதிகளை இலங்கை அரசு பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய போவதாக அறிவித்தது.
இதையடுத்து பொதுமன்னிப்பு பெயர் பட்டியல் அட்டவணையில் மீனவர் இராபர்ட் பெயரையும் சேர்க்கபட்டது. இதனால் ஓராண்டு தண்டனை பெற்ற மீனவர் ராபர்ட் அவர்களும் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார் தற்போது இலங்கை அரசின் பொது மன்னிப்பில் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வெளிநாட்டு தண்டனை கைதி இவர் மட்டுமே.
விடுதலையான மீனவர் ராபர்ட் அவர்கள் விமான மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு மீன்வளத்துறை மூலம் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
மீனவர் ராபர்ட் விடுதலைக்கு உதவிய தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு மற்றும் இலங்கை அரசிற்கும் மீனவர்களின் குடும்பம் சார்பில் நன்றியை தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில்இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கின்ற அனுரா திசநாயக்க அவர்களுக்கு தமிழக மீனவர்கள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.