ராமநாதபுரம் விநாயகர், அம்மன் கோயில்களில் கும்பாபிேஷகம்.!

60பார்த்தது
ராமநாதபுரம் விநாயகர், அம்மன் கோயில்களில் கும்பாபிேஷகம்.!
ராமநாதபுரம் வடக்கு தெரு செல்வ விநாயகர் கோயிலில்கும்பாபிேஷகம் நடந்தது. விழா ஜூன் 7 ல் கணபதி ேஹாமத்துடன் துவங்கி, மூன்றுகாலயாகபூஜைகள் நடந்தது.

நேற்று காலையில் கும்பகலசங்கள் புறப்படாகி காலை 10: 00மணிக்கு கோபுரகலசத்தில் புனிதநீர் ஊற்றினர். மூலவர் செல்வ விநாயகருக்கு அபிஷேகம் செய்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம்வழங்கப்பட்டது. மாலையில் விநாயகர் வலம் வந்தார்.

ராமநாதபுரம் முகவை ஊருணி மேல்கரையில் அமைந்துள்ள ராஜகாளியம்மன் கோயில் யாகபூஜைகளுடன் அம்மன், பரிவார தெய்வங்களான வராஹி அம்மன், கருப்பண்ணசுவாமி ஆகியோருக்கு அபிேஷகங்கள் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.

அன்னதானம் வழங்கினர். மாலையில் அம்மன் ஊர்வலம்நடந்தது. ராமநாதபுரம் தெற்குத்தெருவில் அமைந்துள்ள களஞ்சியத்து காளியம்மன், கோல்கட்டா காளியம்மன்கோயிலில் விநாயகர் பூஜை, யாகசாலை பூஜைகளுடன் காலை 8: 00மணிக்கு கும்பாபிேஷகம் நடந்தது.

காளியம்மன், சிவன், விநாயகர், முருகன், நாகம்மாள், சமயபுரம் மாரியம்மன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு அபிேஷகம் செய்து அலங்காரத்தில்பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி