டி. என். பி. எஸ். சி. , குரூப் 4 தேர்வு: 8582பேர் 'ஆப்சென்ட்'

53பார்த்தது
டி. என். பி. எஸ். சி. , குரூப் 4 தேர்வு: 8582பேர் 'ஆப்சென்ட்'
ராமநாதபுரம் மாவட்டத்தில் டி. என். பி. எஸ். சி. , குரூப் 4 தேர்வில் 41 ஆயிரத்து 445 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 8582 பேர் தேர்வு 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். 32 ஆயிரத்து 863 பேர் தேர்வு எழுதினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு பணியாளர்தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு நேற்று நடந்தது.

தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 6 ஆயிரத்து 244 இளநிலை உதவியாளர், வி. ஏ. ஓ. , ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு காலை 9: 30 முதல் 12: 30 மணி வரை 146 மையங்களில் 165 அறைகளில் தேர்வு நடந்தது. இதில் பத்தாம்வகுப்பு படித்திருந்தால் போதுமானது. பட்டதாரிகள், முதுநிலை, இன்ஜினியரிங் பட்டதாரிகள் கூட இந்த தேர்வினை எழுதினர்.

தேர்வு நடக்கும் மையங்களில் கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லுாரி மையத்தையும், சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள மையத்தினையும் கலெக்டர் விஷ்ணுசந்திரன் பார்வையிட்டார்.

பின் அவர் கூறியதாவது: இந்த தேர்வில் 32 ஆயிரத்து 863 பேர் தேர்வு எழுதினர். ஒவ்வொரு அறக்கும் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விடைத்தாளை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சேர்க்க நகர்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணியின் போது கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார், கடலாடி தாசில்தார் ரெங்கராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி