உச்சநீதிமன்ற அனுமதி இல்லாமல் சனாதன வழக்கில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது இனி புதிய வழக்குகள் பதியக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை தொடரும் என தெரிவித்துள்ள நீதிபதிகள், இவ்வழக்கை ஏப்ரல் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். சென்னையில் 2023ஆம் ஆண்டு நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி, டெங்கு, மலேரியா, கொரோனாவை ஒழித்தது போல சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும் என பேசினார். இதற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.