கேரளா: நிபா வைரஸ் பாதிப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்ட 5 மாவட்டங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை கேரள சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, எர்ணாகுளம் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கேரளா ஒன் ஹெல்த் சென்டர் ஃபார் நிபா ரிசர்ச் புதிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் முன்பு நிபா வைரஸ் பதிவாகியிருந்தது. பழந்தின்னி வௌவால்களின் இனப்பெருக்க காலம் என்பதால் தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.