துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் அபிநய் ஜங்ஷன், சக்ஸஸ், என்றென்றும் புன்னகை, ஆறுமுகம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அபிநய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் லிவர் சிரோசிஸ் (Liver Cirrhosis) நோயால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. வறுமையில் வாடும் தனக்கு மேல் சிகிச்சைக்கு ரூ.28 லட்சம் தேவைப்படுவதால் உதவி செய்யுமாறு கோரியுள்ளார்.