அரசு ஊழியர்களுக்கு,1973ல் உருவாக்கப்பட்ட நடத்தை விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்து உத்தரவிட்டுள்ள நிலையில் புதிய விதிகளையும் வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள், எந்தவொரு அரசியல் கட்சி, அமைப்பிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது. வேறு எந்த வகையிலும் தொடர்பு வைத்திருக்க கூடாது. தேர்தலில் ஓட்டு போடலாம்; ஆனால், யாருக்காகவும் பிரசாரம் செய்யவோ, வேறு வகைகளில் தலையிடவோ கூடாது உள்ளிட்டவை இதில் அடக்கம்.