சுந்தர்.சி இயக்கத்தில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் உருவாகவுள்ளது. இதன் பூஜை சென்னையில் இன்று (மார்ச். 6) நடைபெற்றது. மார்ச் 15-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் நயன்தாரா அம்மன் வேடம் ஏற்பதால் கடந்த ஒரு மாதமாக விரதம் இருப்பதாகவும், அவர் குடும்பத்தாரும் விரதம் கடைப்பிடிப்பதாகவும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்தார்.