ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் இல்ல திருமண விழாவை நடத்தி வைப்பதற்காக வருகை புரிந்த மதிமுக முதன்மை செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோவிற்கு ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பரமக்குடியில் உள்ள வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் திருமண மண்டபத்திற்கு வருகை தந்த துரை வைகோ திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.
அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது குறித்து வெளியுறவு துறை அமைச்சரிடம் விரிவாக எடுத்துச் சொல்லியுள்ளேன் என்றும் விரைவில் மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன் எனக் கூறினார். மேலும் தற்போது உள்ள சூழ்நிலையில் கட்சி தீவை மீட்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கச்சத்தீவு ஒப்பந்தம் முறையில் அதை திரும்ப கொடுப்பதற்கு இலங்கை அரசு தயாராக இல்லை என்றும் கூறினார். எனவே கட்சி தீவை மீட்பதை விட்டுவிட்டு மீனவர்கள் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கூறினார்.