இதுவரை செல்போன் சிக்னல் கிடைக்காத கிராமம்..!

82பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் அரியக்குடி புத்தூர் ஊராட்சியில் அரியக்குடி, புத்தூர், முத்து செல்லாபுரம், செங்காக்கா, முக்காணி, வாழ வந்தால்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 5, 000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த பல வருடங்களாக செல்போன் டவர் இல்லை என்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாமலும் முதியவர்கள் மருத்துவ உதவி பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது அதேபோல கால் செய்வதற்கு மொட்டை மாடிகளிலும், வீட்டை விட்டு வெளியே வருவதும் கண்மாய் கரைகளை நோக்கி ஓடுவதுமான நிலை தொடர்கதையாகி வருகிறது தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இந்த கிராமத்திற்கு தனி கவனம் செலுத்தி செல்போன் டவர் அமைத்து தர அப்பகுதி மக்களின் அனைவரின் கோரிக்கையாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி