ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தூய்மை பாரத இயக்கம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியை பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கொளர் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500 -க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிறுவர்கள் பங்கேற்றனர்.
ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய போட்டி ஓட்டப்பாலம், 5 முனை சாலை, கிருஷ்ணா தியேட்டர் மற்றும் சர்வீஸ் சாலை வழியாக 8 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் வழங்கப்பட்டது.