டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளை கணினிமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பில்லிங் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மது பாட்டில்களுக்கு பில் வழங்கும் நடைமுறை சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக ராணிப்பேட்டையில் உள்ள 7 கடைகளில் தொடங்கப்பட்டது. மேலும் மதுபாட்டில்களை ஸ்கேன் செய்தால் அந்த பாட்டில் எங்கே வாங்கப்பட்டது, எந்த தேதியில் வாங்கப்பட்டது போன்ற பல்வேறு விபரங்களை அறியலாம்.