காவேரி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

61பார்த்தது
காவேரி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் குழு மருத்துவமனை முழுவதும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இமெயில் அனுப்பிய மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசாரும், மேடவாக்கம் போலீசாரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி