பெருமாள் கோயிலுக்கு சென்று பகவானை வணங்கிய பின்னர் தீபாராதனை முடித்து, துளசி தீர்த்தம் பெற்ற பிறகு பக்தர்களின் தலை மீது ஒரு மகுடத்தில் இரண்டு திருவடிகள் பொறிக்கப்பட்ட சடாரி வைக்கப்படுகிறது. சடாரி சார்த்தப்படுவதால் ஒருவரது மனதில் உள்ள அகந்தை அகன்று மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் குடிகொள்ளும் என்பது பொதுவான நம்பிக்கை. ‘நான்' என்ற ஆணவம், அகங்காரம் நீங்கும் என்பதும் சடாரியின் அடிப்படை தத்துவம்.