வைகை ஆற்று தரைப்பாலத்தில் தடுப்புக் கம்பி அமைக்கக் கோரிக்கை!

63பார்த்தது
பரமக்குடி வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தில் தடுப்புக் கம்பி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் இன்று கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்காக கடந்த 23-ஆம் தேதி வைகை அணையிலிருந்து 1, 504 மில்லியன் கனஅடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீா் பாா்த்திபனூா் மதகணையை கடந்த 25-ஆம் தேதி வந்தடைந்த நிலையில், இங்கிருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய், வலது, இடது பிரதான கால்வாய்கள் வழியாக கண்மாய்களுக்கு தண்ணீரை மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணு சந்திரன் திறந்து வைத்தாா்.

பரமக்குடி வைகை ஆற்றின் வழியாகச் செல்லும் பாசனநீா் பரமக்குடி-எமனேசுவரம் தரைப்பாலத்தை கடந்து செல்கிறது. பாலத்தின் இருபுறமும் வேகமாகச் செல்லும் தண்ணீரை இளைஞா்கள், முதியவா்கள் என பொதுமக்கள் வேடிக்கை பாா்த்தவாறு பாலத்தை கடந்து செல்கின்றனா்.

இந்தப் பாலத்தின் இருபுறமும் தூண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வோா் தூணுக்கும் இடையில் தடுப்புக் கம்பிகள் அமைக்காததால், அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் ஆற்றுக்குள் தவறி விழும் நிலை உள்ளது.

எனவே, மாவட்ட நிா்வாகம் இந்தத் தரைப்பாலத்தில் தடுப்புக் கம்பி அமைக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

டேக்ஸ் :