ஒருவர் எடையை BMI வைத்து கணக்கிட்டாலும், இடுப்பு சுற்றளவை கணக்கிடுவது அவசியம். இடுப்பின் சுற்றளவு அதிகமானால் நோய் அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இடுப்பு, வயிற்றுப் பகுதியில் படியும் அதிகப்படியான கொழுப்புகள், டைப் 2 நீரிழிவுக்கு வழிவகுக்கும். ஆண்களின் இடுப்பளவு 37 இன்ச்-க்கு மேலும், பெண்களுக்கு 31.5 இன்ச்-க்கு மேலும் இருத்தல் கூடாது. இடுப்பு சுற்றளவு அதிகரிக்க, அதிகரிக்க நோய்களும் அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.