ஸ்வச் பாரத் செஸ், அடிப்படை கட்டமைப்பு வரி, சுகாதாரம் மற்றும் கல்வி செஸ், விவசாய கட்டமைப்பு செஸ் போன்ற வரி விதிப்புகளில் மாநிலங்களுக்கு பங்கு மறுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய வரிகளால் மத்திய அரசின் வருவாய் 2024-ல் 26% ஆக உயர்ந்து விட்டது. இந்த வரி வருவாய் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. அதேபோல், ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு வரி விதிக்கும் அதிகாரத்தை மாநிலங்கள் இழந்து விட்டன. இந்த நிலையில் மத்திய அரசு தரும் நிதி 41%-ல் இருந்து 40% ஆக குறைக்கப்பட உள்ளது.