மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வருகிறது. அதில், கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பணம் செலுத்துமாறு கூறப்படுகிறது. அந்த லிங்க் மூலம் மின்கட்டணத்தை செலுத்தி, பொதுமக்கள் பணத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற SMS-கள் அல்லது அழைப்புகள் வந்தால் பணம் செலுத்த வேண்டாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது. யாரேனும் பணத்தை இழந்து இருந்தால் சைபர் க்ரைம் எண் 1930-ஐ அழைக்குமாறு கூறப்பட்டுள்ளது.