நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று இரவு 8 மணி அளவில் ஆஜராக உள்ளார். தற்போது வடபழனியில் உள்ள நட்சத்திர விடுதிக்குச் சென்ற சீமான், கைது செய்தால் என்ன செய்வது? என்பது குறித்து தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில், சீமானை காண வளர்ப்பு நாயுடன் வடபழனியில் உள்ள விடுதிக்கு, சீமானின் மனைவி கயல்விழி சென்றுள்ளார்.