சேலம் மாவட்டத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த சீமான், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “என்னை சமாளிக்க முடியாத நேரங்களில் பாலியல் புகாரை கையில் எடுக்கிறார்கள். திட்டமிட்டு என்னை அவமானப்படுத்தும் வகையில் கதவில் சம்மனை ஒட்டியுள்ளனர். அந்த சம்மனை கிழித்துபோடாமல் அதை வைத்து சாமி கும்பிடவா முடியும். வீரனை வீரத்தால் எதிர்கொள்ள வேண்டும். கைது செய்தவர்களை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்” என கூறியுள்ளார்.