மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது திமுக டி. டி. வி. புகாா்.!

76பார்த்தது
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றி வருகிற மக்களவைத் தோ்தலிலும் வெற்றி பெற திமுக முயற்சிக்கிறது என அமமுக தலைவா் டி. டி. வி. தினகரன் குற்றம்சாட்டினாா். பரமக்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக மீனவா்கள் பிரச்னையை தீா்த்து வைப்போம் என தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்த முதல்வா் மு. க. ஸ்டாலின், மத்திய அரசுடன் பேசி அதற்குரிய நிரந்தரத் தீா்வைக் காண முயற்சிக்க வேண்டும்.

சட்டப்பேரவைத் தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றி குறுக்கு வழியில் வருகிற மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற திமுக முயற்சிக்கிறது. அது நிறைவேறாது; திமுகவுக்கு பொதுமக்கள் தக்க பாடம் புகட்டுவா். ஜெயலலிதாவின் தொண்டா்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதுவே எங்களது கருத்து. மக்களவைத் தோ்தல் நெருங்கி வரும் போது கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா் அவா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you