கலைஞர் நூற்றாண்டு விழா: வடமாடு எருது கட்டு.!

58பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள சின்னகீரமங்கலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக முதலாம் ஆண்டு வடமாடு எருதுகட்டு திருவிழா நடைபெற்றது.

      இந்த விழாவிற்கு ராமநாதபுரம்  மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார் மாவட்ட கவுன்சிலர் மாநில பொது குழு உறுப்பினர் முத்துமனோகரன்,
திமுக மாவட்ட பிரதிநிதி திருவாடானை மத்திய ஒன்றியம் சுரேந்திரன் முன்னிலையில் வகித்தார்.


இந்த வடமாடு எருது கட்டு போட்டியில் ஒரு காளைக்கு 9 இளைஞர்கள் என போட்டி ஆரம்பிக்கப்பட்டு 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இந்த 15 நிமிடங்களுக்குள் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கும் காளைகளுக்கும் பணம், கோப்பை, பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டது.


இந்த திருவிழாவிற்கு புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட மாடுகளும் பல்வேறு ஊர்களில் இருந்து மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டார். இதனை காண சுற்றுவட்டாரத்தில் இருந்து வந்திருந்த ஏராளமான கிராம மக்கள் கண்டு ரசித்தனர்.

      விழாவிற்கு திருவாடானை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் சுகாதாரத் துறை சார்பில் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி