விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சுரேந்திரன் மகன் கனி கார் ஓட்டுநரான இவர் 3 பேரை ராமேசுவரத்துக்கு காரில் அழைத்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, சத்திரக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் எதிரே வந்த லாரியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுநர் கனி உயிரிழந்த நிலையில், மற்ற 3 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.