தெப்பக்குளத்தில் மூழ்கி 2 வயது குழந்தை பலி

69பார்த்தது
திருவாடானை அருகே திருவெற்றியூர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீவல்மீகநாதசுவாமி சமேத ஸ்ரீபாகம்பிரியாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதிகாலை சாமி தரிசனம் செய்தால் பிணிகள் நீங்கி, நன்மை வந்து சேரும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொட்டகுடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன்- ஜெயலட்சுமி தம்பதியினருக்கு திருமணமாகி தர்ஷன்(6) என்ற மகனும், பாலதர்ஷினி என்ற 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். ஜெயலட்சுமியின் கணவர் பாலமுருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், கோவிலில் சாமி கும்பிடுவதற்காக ஜெயலெட்சுமி, அவரது தாயார் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நேற்று திருவெற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் கோவிலுக்கு வந்து அங்கு இரவு தங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அவரது 2 வயது பெண் குழந்தை தெப்பக்குளத்தில் விழுந்து மூழ்கி பலியானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொண்டி போலீசார் நீரில் மூழ்கி பலியான 2 வயது பெண் குழந்தை பாலதர்ஷினியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாமி கும்பிட சென்றபோது கோவில் குளத்தில் குழந்தை மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி