கமுதி உள்பட 10 இடங்களில் தொழில் பயிற்சி நிலையங்கள்.!

78பார்த்தது
கமுதி உள்பட 10 இடங்களில் தொழில் பயிற்சி நிலையங்கள்.!
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மாணவா்கள், இளைஞா்களின் நலன் கருதி கமுதி உள்பட 10 மாவட்டங்களில் ரூ. 111 கோடியில் தமிழ்நாடு அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் என நிதித் துறை, மின்சாரத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு திங்கள்கிழமை சட்டப்பேரவையில் அறிவித்தாா்.

இது கமுதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதுகுறித்து இளம் தொழிலதிபரும், கமுதி ஒன்றியச் செயலருமான எஸ். கே. சண்முகநாதன் கூறியதாவது: கமுதி, அதைச் சுற்றியுள்ள 250 கிராமங்களில் உள்ள மாணவா்கள் தொழில் கல்வி பயில 20 கி. மீ. தொலைவில் உள்ள முதுகுளத்தூா், 40 கி. மீ. தொலைவிலுள்ள பரமக்குடி, விருதுநகா் மாவட்டத்தில் 37 கி. மீ. தொலைவிலுள்ள அருப்புக்கோட்டைக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு இந்தப் பகுதி மாணவா்களின் சிரமத்தையும், பயண நேரத்தையும், கூடுதல் செலவையும் குறைக்கும். கமுதியில் தொடங்கப்படும் தொழில் பயிற்சி நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கான மாணவா்கள் பயனடைவா் என்றாா் அவா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி