ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மாரியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கடலாடி அருகே உள்ள மாரியூர் பவளநிறவள்ளியம்மன் உடனுரை பூவேந்தியநாதர் கோயிலுள்ள நந்திய பெருமானாருக்கு 32 வகையான வாசனை திறவியங்கள் மற்றும் பால் அபிஷேகம் நடைபெற்றது. கமுதி மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயில், மண்டலமாணிக்கம் கைலாசநாதர் கோயில், அபிராமம் அடுத்துள்ள அ. தரைக்குடி புஷ்பனேஸ்வரி உடனுரை தரணீஸ்வரர் கோயில், சாயல்குடி மீனாட்சிஅம்மன் உடனுரை கைலாசநாதர், ஆப்பனூர் திருஆப்பநாதர், டி. எம். கோட்டை கருணாகடாச்சிஅம்மன் உடனுரை செஞ்சிடைநாதர், மேலக்கடலாடி அருகே நித்யகல்யாணி உடனுரை வில்வநாதர், மங்களம் ரேனுகாம்பாள் உடனுரை ஆதிசிவன் உள்ளிட்ட சிவன் கோயில்களிலுள்ள நந்திய பெருமானாருக்கு மஞ்சள், பால், தேன், இளநீர் உள்ளிட்ட பல வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன், வில்வ அர்ச்சனை மற்றும் மகா தீபாராதணை நடைபெற்றது.
பக்தர்களுக்கு நந்திய பெருமானாருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பால் பிரசாதமாக வழங்கப்பட்டது.