திருவாடானை பகுதி கோயில்களில் பூக்குழி திருவிழா.!

60பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே செங்கமடை கிராமம் உள்ளது. கிராம மக்களால் வழிபடும் அருள்மிகு கருப்பர் ஆலயம் உள்ளது இந்த கருப்பர் ஆலயத்திற்கு கடந்த ஏப் 30ம் தேதி செவ்வாய்க்கிழமை சித்திரை மாத திருவிழாவானது காப்பு கட்டுகளுடன் தொடங்கி நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்த நிலையில் இன்று கடைசி நாளாக பூக்குழி இறங்கும் திருவிழா நடைபெற்றது.
    
     இந்த திருவிழாவில் பக்தர்கள் ஏராளமான காப்பு கட்டி விரதம் இருந்து முனியய்யா கோவிலில் இருந்து காவடி எடுத்து வீதி உலா வந்து கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

     அதேபோல் திருவாடானை பிடாரியம்மன் கோவிலில் பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து கோவில் முன்பாக அமைக்கப்பட்ட பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த சித்திரை மாத பூக்குழி திருவிழாவில் ஏராளமான பெண்கள் ஆண்கள் என பலர் கலந்து கொண்டார்கள். இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Job Suitcase

Jobs near you