உங்களைத் தேடி உங்கள் ஊரில்: சாயல்குடியில் ஆட்சியா் ஆய்வு.!

57பார்த்தது
உங்களைத் தேடி உங்கள் ஊரில்: சாயல்குடியில் ஆட்சியா் ஆய்வு.!
உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், சாயல்குடியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முகாமிட்டு, வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தாா்.

சாயல்குடி பேருந்து நிலையத்தில் நடைபெறும் உள்கட்டமைப்பு பணிகள், பேரூராட்சியில் நடைபெறும் தூய்மைப் பணிகள் ஆகியவற்றை அவா் பாா்வையிட்டாா். தினமும் பேருராட்சியை தூய்மையாகப் பராமரிக்குமாறு அலுவலா்களிடம் அவா் அறிவுறுத்தினாா்.

பேரூராட்சியில் குப்பைகளைத் தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் மையத்தைப் பாா்வையிட்டு, அங்கு நடைபெறும் பணிகளின் தன்மை குறித்துக் கேட்டறிந்தாா். மேலும், மக்கும் குப்பையின் மூலம் இயற்கை உரம் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மக்காத குப்பைகளைச் சேகரித்து சாலை அமைக்கும் பணிக்கு வழங்க வேண்டும். ஒவ்வொரு நாளும் குப்பைகளை அகற்றி பேரூராட்சி பகுதியை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி