கீழக்கரையில் முத்திரைத்தாள் பற்றாக்குறை நிலவுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
புதியதாக நிறுவனங்கள்மற்றும் வாடகை ஒப்பந்தம், கட்டுமானம் உள்ளிட்ட பதிவு, புதுப்பித்தல் ஆகியவற்றிற்கு முத்திரைத்தாள்களின் பயன்பாடு அத்தியாவசிய தேவையாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக முத்திரைத்தாள்கள் பற்றாக்குறை நிலவுவதால் பத்திர பதிவு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
பயனாளிகள் கூறுகையில், கீழக்கரை தாலுகா பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வரும் போது முத்திரைத்தாள்களான ரூ. 10, 20, 50, 1000, 5000 உள்ளிட்ட முத்திரைத்தாள்கள் ஏதுமின்றி பெரும் சிரமமாக உள்ளது. ராமநாதபுரம் சார்நிலை கருவூலகத்தில் இருந்து பெற்று விற்பனை செய்யக்கூடிய வெண்டர்களுக்கு முத்திரைத்தாள்கள் இல்லாததால் சிரமத்தை சந்திக்கின்றனர். பத்திரம் பதிவதில் தொய்வு ஏற்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் சார்நிலை கருவூல அலுவலங்களில் முத்திரைத்தாள்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி தாலுகா பத்திரப்பதிவு அலுவலகங்களில் நிலவும் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றனர்.