சர்ச்சைக்கு மத்தியிலும் திருப்பதி லட்டு விற்பனை அதிகரித்துள்ளதாக கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. திருப்பதி பிரசாத லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்த விவகாரம் பேசு பொருளானது. இதனிடையே கடந்த 4 நாள்களில் மட்டும் 14 லட்சம் லட்டுகள் விற்பனை செய்துள்ளதாகவும், இது சராசரியை விட அதிகம் என்றும் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், தங்கள் நிர்வாகம் மீது பக்தர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.