சூடங்க கொளுத்தி சாம்பிராணி காட்டி நூதன போராட்டம்.!

65பார்த்தது
ராமநாதபுரத்தில் பல லட்ச ரூபாய் செலவு செய்து கட்டி முடிக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை 5 ஆண்டுகள் ஆகியும் திறக்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் சூடம் ஏற்றி சாம்பிராணி போட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 'வன சங்கரி அம்மன் கோவில் தெரு' பகுதியில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை திறந்து பயன்பாட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது.

மேலும், அந்தப் பகுதியில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி கட்டிடம் இல்லாததால் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருவதாகவும், ஆனால் அரசால் பல லட்ச ரூபாய் செலவில் சகல வசதிகளுடன் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் திறக்கப்படாமல் இருப்பதாக அந்த பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்து திறக்கம்படி கோரிக்கை விடுத்தும் திறக்கப்படாததை கண்டித்து, பூட்டப்பட்ட அலுவலக வாயிலில் சூடம் ஏற்றி ஊதுபத்தி கொளுத்தி, சாம்பிராணி புகை போட்டு பூஜை செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி