சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு எழுதிய "கலைஞர் எனும் தாய்" நூலினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். விழாவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.