தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியது முதலே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போது அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யவுள்ளது.