பிரேசில் நாட்டின் Rio de Janeiro (state) மாகாணத்தில் கடுமையான மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர்மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பரவலான பொருட்சேதங்களை ஏற்படுத்தியுள்ளதோடு நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதமடைந்துள்ளது. இதனிடையில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்றும், வரும் நாட்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் தொடரும் என்றும் அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.