வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி?

63பார்த்தது
வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி?
மக்களவை தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இரண்டு இடங்களிலும் வெற்றி கண்டார். இதனையடுத்து ஏதேனும் ஒரு தொகுதியில் எம்.பி பதவியை ராஜினாமா செய்யவேண்டிய சூழலில் அவர் உள்ளார். இந்நிலையில், வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் கேரள மக்கள் வருத்தப்படக்கூடாது. ராகுலை புரிந்துகொண்டு அவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ராகுல் காந்திக்கு தேசத்தை காக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுதாகரன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி