ரூ.300 கோடி சொத்துக்காக மாமனாரை கொலை செய்த மருமகள்

79பார்த்தது
ரூ.300 கோடி சொத்துக்காக மாமனாரை கொலை செய்த மருமகள்
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக சொத்துக்காக அவரின் மருமகள் கொலை செய்தது தெரியவந்துள்ளது. கடந்த மே 22 புருஷோத்தம் புத்தேவ்(82) என்ற முதியவர் மீது கார் மோதியதில் அவர் உயிரிழந்தார். இவ்வழக்கில் கார் ஓட்டுனர் கைதாகி பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரித்த போது புருஷோத்தம் திட்டமிட்டு கொல்லப்பட்டது தெரிந்தது. மேலும், 300 கோடி ரூபாய் சொத்தை அடைவதற்காக அவரது மருமகள் அர்ச்சனா புட்டேவார் (53) தான் கூலிப்படையை ஏவி இந்தக் கொலையைச் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அர்ச்சனா மற்றும் அவரின் கூட்டாளிகள் சர்தக் பாக்டே, தர்மிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி