ஒரு கோடிக்கு மழை நீர் வடிகால்.. எந்த பயனும் இல்லை..

55பார்த்தது
திருத்தணியில் நேற்று இரவு (ஜூன் 11) சுமார் ஒரு மணி நேரமாக மழை வெளுத்து வாங்கியது. இதனால், ரயில் நிலையம் செல்லும் பாதையில் தண்ணீர் தேங்கியது. மழை நீருடன் சேர்ந்து கழிவுநீரும் கலந்து சாலையில் சென்றதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். முன்னதாக இதேபோல் மழைநீர் சாலையில் செல்வதாக புகார் எழுந்த நிலையில் ரூ.1 கோடியில் மழை நீர் வடிகால் கட்டப்பட்டது. இருந்தபோதிலும் நேற்று பெய்த மழைநீர் வடியாமல் சாலையில் ஆறாக ஓடியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி